எம்மைப் பற்றி

இயற்கையுடன் இசைவான விவசாயத்தினை செய்வதற்கு நாம் விவசாயிகளிற்கு உதவி புரிகிறோம்.

உலகமயமான விவசாயத்தில் மிகபெரும் திருப்புமுனையை அடைந்துள்ள நாம், எமக்கும் எம் வருங்கால சந்ததிகளுக்குமான நிலையான விவசாயத்தினைக் கட்டியெழுப்புவதற்கு கடமைப்பட்டுள்ளோம். தொழில்நுட்பங்களால் இயக்கப்படுவதாக இருப்பினும், பல பயிர்களில் குறைந்து செல்லும் விளைச்சலின் அளவானது, உலகளாவிய ரீதியில் மிகப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2007 ஆம் ஆண்டிலிருந்து, பல்வேறு நன்மை பயக்கும் நுண்ணங்கிகளின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. உயிரியல் கட்டுப்பாட்டு நுண்ணங்கிகளான சூடோமொனாஸ் , ரைக்கோடேர்மா போன்றனவும், உயிரியல் உரங்களான அசட்டோபக்டர், றைசோபியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள், உர வகைகள் என்பனவும் திரவ மற்றும் தூள் வடிவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

'உயிர் உரம் & நனோ வடிகட்டும் தொழில்நுட்பம்' எனும் தலைப்பில் தேசிய ரீதியிலான இரண்டு மாநாடுகள் 2007 & 2008 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் நடாத்தப்பட்டது. விவசாய திணைக்கள இயக்குனர் மற்றும் ஆராய்ச்சி அதிகாரிகளுடன் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அழைக்கப் பட்டிருந்த விஞ்ஞானிகளும் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.

2007 & 2008 இல் பயோகோல்ட் மற்றும் பயோபொஸ்சிற்கான பரீட்சார்த்த களரீதியான சோதனைகள் கன்னொருவ விவசாய திணைக்கள ஆராய்ச்சி நிலையத்திலும் வேறு பல நிலையங்களிலும் நடத்தப்பட்டது. எம்மை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வினைத்திறனான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன.