பயோகோல்ட்

விவசாயத்தின் அடிப்படை உள்ளீடான மண் உயிருள்ள ஒன்றாக கருதப்படுகின்றது. நுண்ணுயிரிகளினதும் மாயுரிகளினதும் இருக்கையும் அவற்றின் செயற்பாடுகளும் மண்ணிற்கு உயிர்த் தன்மையை அளிக்கின்றன. பயனுள்ள நுண்ணுயிர்கள் குறிப்பாக பக்டீரியாக்கள் , பயிர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், நோய் மற்றும் வட்டப்புழு எதிர்ப்புத் தன்மையை வழங்குவதற்கும் பொறுப்பாய் உள்ளன. விவசாயத்தில் இரசாயனத்தின் மிதமிஞ்சிய பாவனையால் இவ் நுண்ணங்கிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதன் விளைவாக மண்ணின் வளம் குன்றுகின்றது. எனவே அசட்டோபக்டர் மற்றும் சுடோமொனஸ் போன்ற பாக்டீரியாக்களின் கலவையை பிரயோகிப்பதன் மூலம் விவசாயத்தில் இரசாயன உள்ளீடுகளின் பயன்பாட்டை குறைத்தல் முக்கியமானது ஆகும்.

Bio gold ஆனது நைதரசன் பாதிக்கும் மற்றும் தாவர நோய்களை கட்டுப்படுத்துகின்றனவுமான பயனுள்ள பாக்டீரியாக்களை கொண்டுள்ள ஒரு திரவ வடிவமாகும். இப் பயனுள்ள பக்டீரியாக்களை மண்ணில் பயன்படுத்தியதை தொடர்ந்து அவை பன்மடங்காக பெருக்கமடைந்து நைதரசன் பதித்தல், பொசுபரசு கரைதிறன் அதிகரித்தல், நோய்களை கட்டுப்படுத்தல் போன்ற தொழில்களை மேற்கொள்ளுகின்றன. இதன் விளைவாக மண்வளமும் பயிர்விளைச்சலும் அதிகரிக்கின்றது. Bio gold ஆனது இயற்கையாக மண்ணில் இருந்து தனிப்படுத்தப்பட்ட அசட்டோபக்டர் குறூகொக்கம் மற்றும் சூடோமொனஸ் புளொறசன்ஸ் போன்ற ஒத்திசைவான நுண்ணுயிர்களை திரவ வடிவில் கொண்டுள்ளது.

அசட்டோபக்டர் குறூகொக்கம்

அசட்டோபக்டர் குறூகொக்கம் ஆனது மிகவும் முக்கியமான நைதரசன் பதிக்கும் மண்பக்டீரியாவாகும். அது இலட்சக்கணக்கில் பல்கிப்பெருகிப் பெருந்தொகையான பல்சக்கரைட்டுகளை சுரப்பதன் மூலம் மண்ணின் பண்புகளை முன்னேற்றுகின்றது. அவை வளிமண்டல நாதாரசனை பாதிப்பதுடன் பயிர்களுக்கு நைதரசனை ஒரு சமநிலையான முறையில் வழங்குகின்றன. அசட்டோபக்டர் ஆனது மண்ணின் பௌதிகப் பண்புகளை முன்னேற்றுவதன் மூலமும் பல்வேறுபட்ட வளர்ச்சி தூண்டும் பதார்த்தங்களை சுரப்பதன் மூலமும் நோய், வறட்சியை எதிர்ப்பதற்கு பங்களிக்கின்றது.

சூடோமொனஸ் புளொறசன்ஸ்

சூடோமொனஸ் புளொறசன்ஸ் பல்வகைப்பயன் அளிக்கும் பக்டீரியம். இது ஒரு திறனுள்ள உயிருள்ள வட்டப்புழு கொல்லி. இது ஏலம், உருளைக்கிழங்கு, ஏனைய மரக்கறிப் பயிர்கள், பழங்கள், தானியப்பயிர்கள் என்பனவற்றில் வட்டப்புளிக்களை கட்டுப்படுத்துகின்றன. இதன் பயனுள்ள அனுசேபப் பொருட்கள் தாவரங்கள், நாற்றுமேடைகளில் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதில் செயல்விளைவு மிக்கவை. சூடோமொனஸ் ஒட்டுண்ணித்தன்மை, நுண்ணுயிர்க்கொல்லல், போட்டியிடுதல் போன்ற எதிர்ப்பான பின்னிய தாக்கங்களின் மூலம் வட்டப்புழு மற்றும் நோயை கட்டுப்படுத்துகின்றன. இவ் பக்டீரியாவானது வேறுபட்ட சேதன அமிலங்களை சுரப்பதன் மூலம் கரையமுடியாத பொசுபரசுகளின் கரையும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் பயிர்களுக்கு பொசுபரசு கிடைத்தலை அதிகரிக்கின்றது.

அசட்டோபக்டர் மற்றும் சூடோமொனஸ் என்பவை இலங்கையின் உள்ளூர் மண்ணில் இருந்து தனிப்படுத்தப்படுவதினால் அவற்றின் இசைவாக்கம், பெருக்கம், செயல்விளைவு என்பவை மிகவும் நம்பிக்கை அளிக்கின்றன.

Bio gold பயன்படுத்தும் முறை

Bio Gold ஆனது அனைத்து கமத்தொழில் பயிர்களுக்கும் தோட்டப் பயிகளுக்கும் அவற்றின் வேர்ப்பகுதியைச் சுற்றியும் இலைகளின் மீதும் தெளிப்பதன் மூலம் பயன்படுத்த முடியும். Bio gold கலக்கும் தாங்கியில் தேவையான அளவு கலப்பதன் மூலம் சொட்டு நீர்ப்பாசனத்துடன் சேர்த்தும் பயன்படுத்த முடியும். அத்துடன் வித்துப்பரிகரிப்பு, நாற்றுமேடை என்பவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

  பயிர்கள் அளவு பிரயோகம்
1 உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய் மற்றும் ஈனிய மரக்கறிப் பயிர்கள், அன்னாசி, திராட்சை, வாழை, கரும்பு, மஞ்சள்,வனில்லா மற்றும் மிளகு, தேயிலை, கோப்பி போன்ற பெருந்தோட்டப் பயிர்கள், நெல் போன்ற தானியப் பயிர்கள், மற்றும் மருத்துவத் தாவரங்கள். ஒரு ஏக்கருக்கு 3 லீட்டர் 200 லீட்டர் நீரில் 3 லீட் டர் bio gold கலந்து தாவரத்தின் மீதும் வேர்ப் பகுதியைச் சுற்றியும் தெளித்தல்.
குறைந்த அளவு 2 தெளிப்பு பயிர்ச்செய்கை காலத்தில்
2 தென்னை, இறப்பர், கருவா மற்றும் மா, கொய்யா, போன்ற பழப் பயிர்கள் மற்றும் ஏனைய மரப் பயிர்கள்.

ஒரு ஏக்கருக்கு 4 லீட்டர்

200 லீட்டர் நீரில் 4 லீட் டர்  bio gold  கலந்து தாவரத்தின்  வேர்ப் பகுதியைச் சுற்றி தெளித்தல்.
பருவ மழைக்காலங்களின் பொது ஆண்டுக்கு இரு தடவை சிபாரிசு செய்யப்படுகின்றது.
3 சாதியில் வளர்க்கப்படும் தாவரங்கள்.

மரமொன்றுக்கு 25 மி. லீ.

500 மி. லீ. (0.5 ளீட்டர்) நீரில் 25 மி.லீ.  bio gold டை கலந்து தாவரத்தின் மீதும் வேர்ப்பகுதியை சுற்றியும் தெளித்தல்.
மூன்று மாத இடைவெளியில் தெளிக்கவும்.

நல்ல விளைச்சலை பெறுவதற்கு bio gold ஆனது கூட்டெருவுடன் அல்லது ஏனைய சேதன சேர்வைகளுடன் (மாட்டெரு) கலந்து பாவிக்க முடியும்.

Bio gold 100% நச்சுத்தன்மையற்ற ஒரு சேதன உயிர் நுண்மத் தயாரிப்பு. உயர்ந்த அளவுப் பிரமாணமும் அடிக்கடி தெளித்தலும் பயிர்களில் கூடிய விளைச்சலையும் தரத்தில் முன்னேற்றத்தையும் ஏற்ப்படுத்தும்.

இரசாயன பீடைக்கொல்லி மற்றும் பங்கசு கொள்ளியுடன் பயோ கோல்டைக் கலந்து உபயோகிப்பதை தவிர்க்கவும்.

Bio gold சூழலுக்கு ஆதரவான சேதன தவற வளர்ச்சி உற்பத்திப்பொருள் சேதன பயிர்ச்செய்கைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.