பயோ பொஸ் - உயிர் உரம்

பொஸ்பரஸானது தாவரங்களுக்கும் நுண்ணங்கிகளுக்கும் மிகவும் முக்கியமான ஒரு மூலகமாகும். பொஸ்பரஸ் ஆனது கல்சியம், இரும்பு, அலுமினியம் மற்றும் புளோரைட் எனும் அசேதன வடிவங்களில் காணப்படுகின்றது. அத்துடன் பைட்டின், பொஸ்போ இலிப்பிட்டு, நியுக்களிக்கமிலம், பாறை பொஸ்பேற்று, என்பு போன்ற சேர்வைகளில் சேதன வடிவிலும் காணப்படுகின்றது.

பொதுவாக பாறை பொஸ்பேற்று ஆனது தாவரங்களின் பொஸ்பரஸ் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது. இருந்தபோதிலும் பாறை பொஸ்பேற்றில் 2-4 % பொஸ்பரசை மட்டுமே தாவரங்களால் அகத்துறிஞ்சக்கூடியதாக காணப்படுகின்றது.

மண்ணில் உள்ள பக்டிறியாக்களான Pseudomonas மற்றும் Bacillus என்பவை போமிக், அசெற்றிக், புரோபியோனிக், லக்டிக், கிளைக்கொலிக் போன்ற சேதன அமிலங்களை சுரப்பதன் மூலம் பாறை பொஸ்பேற்று போன்ற கரைய முடியாத பொஸ்பேற்றுக்களை கரையக்கூடிய வடிவில் மாற்றும் திறன்வாய்ந்தவை. இந்த அமிலங்கள் மண்ணின் pH பெறுமானத்தை குறைப்பதன் மூலம் கரைய முடியாத பொஸ்பேற்றுக்களை கரையக் கூடிய பொஸ்பேற்றுக்களாக மாற்றுகின்றன. இக்கரையக்கூடிய பொஸ்பேற்றுக்கள் இறுதியில் தாவரங்களால் அகத்துறிஞ்சப்படுகின்றன.

மண்ணில் நுண்ணங்கிகளால் மேற்கொள்ளப்படும் பொஸ்பரஸ் கரைதல் செயற்பாடானது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். எனவே இவ் நுண்ணங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தாவரங்களின் பொஸ்பரஸ் தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். இது பரிசோதனைகள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது பாறை பொஸ்பேற்று, பொஸ்பரசை கரைக்கும் பக்டிரியா ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தும் போது வேறுபட்ட மண்ணின் pH நிலைமைகளில் 40-50% பொஸ்பரஸ் அதிகரிக்கின்றது. அதாவது பொஸ்பரஸ் கிடைக்கும் அளவானது 15-20% அதிகரிக்கின்றது.

Bio Phos® ஆனது பொஸ்பரசை கரைக்கும் பக்டிரியாவான Bacillus megatherium ஐ கொண்ட ஒரு திரவ வடிவமாகும். Bio Phos® ஆனது பாறை பொஸ்பேற்றுடன் சேர்ந்து பயன்படுத்தும் போது இவ் பக்டிரியாக்கள் பான் மடங்காக பெருக்கமடைவதுடன் சேதன அமிலங்களை சுரப்பதன் மூலம் பொஸ்பரஸ் கரைக்கும் தொழிலை மேற்கொள்கின்றன.

 

பாவனை முறை
  • ஏக்கர் ஒன்றுக்கு 2 லீட்டர் Bio Phos® யை 180 லீட்டர் தண்ணீரில் கலந்து பாறை பொஸ்பேற்று கலந்த மண்ணுக்கு பயிர்களை சுற்றி விசிறவும்.
  • சேதன பயிர்ச்செய்கைக்கு 10 லீட்டர் Bio Phos® யை ஏக்கர் ஒன்றுக்கு 150 லீட்டர் - 180 லீட்டர் தண்ணீரில் காலன் கலந்து பாறை பொஸ்பேற்று கலந்த மண்ணுக்கு பயிர்களை சுற்றி வீசவும்.