பயோ சூப்பர் பொஸ்®

இயற்கையான பொஸ்பரஸ், பொட்டாஷ் மற்றும் உக்கலை வழங்குகின்றது. வினைத்திறனான விலை, சூழலுக்கு சிநேகமானது அடிக்கட்டு உரமாக பயன்படுத்த உகந்தது.

1. பயோ சூப்பர் பொஸ்® ஒரு தனித்துவமான உயிரியல் தயாரிப்பு. இதில் தாது பாறை பொஸ்பேற்றானது, பொஸ்பரேஸ் நொதியத்தாலும் உயிரியல் காபனாலும் செழிப்பாக்கபட்டுள்ளது.

2. பயோ சூப்பர் பொஸ்® இல் பொஸ்பரஸ் உள்ளடக்கம் 20% ஆகும். இது ஏனைய இரசாயன உரங்களிலுள்ள பொஸ்பரசிலும் அதிகமாகும்.

3. பயோ சூப்பர் பொஸ்® ஆனது உயிரியல் நொதியங்களாலும் காபன் மற்றும் உக்கல் துணிக்கைகளாலும் சூழப்பட்டிருப்பதால் மண்ணுக்கு பிரயோகித்த பின்னும் பொஸ்பரசானது தொடர்ச்சியாக தாவரங்களுக்கு உயிரியல் நொதியங்களின் தொழிற்பாடு காரணமாக பொஸ்போரிக் அமிலமாக கிடைக்கின்றது. இதன் விளைவாக வேர் உறுதியாக வளர்ச்சி அடைவதுடன் போசணையும் சிறப்பாக அகத்துறிஞ்சப்படுகிறது.

4. பயோ சூப்பர் பொஸ்® சேதன காபன் ( சேதன பொருட்கள் 10-20%) பொட்டாஷ் (1.5%) மற்றும் நைதரசன் என்பவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதால் சிறந்த தாவர அனுசேப தொழிற்பாட்டையும் உச்ச விளைச்சலையும் உறுதிப்படுத்துகின்றது.

5. சேதன பயிர்ச்செய்கையில் பயன்படுத்தும் போது, அனுசேப பயிர்ச்செய்கைக்கு சிபாரிசு செய்யப்பட்ட அளவின் இரு மடங்கு பயோசூப்பர் பொஸ்® பயன்படுத்தவும்.

6. சூப்பர் பொஸ்® பயன்படுத்தும் போது Triple Super Phosphate பிரயோகிக்கத் தேவையில்லை.