பக்டோ பிடிஐ

BTI என அழைக்கப்படும் பசிலஸ் துறிஞ்ஜியேன்சிஸ், பிரபல்யம் வாய்ந்த ஒரு பக்டீரியாவாகும். இது நுளம்புக் குடம்பிகளைத் தாக்கி அழிக்கும் பளிங்குருவான நச்சுக்களினை உருவாக்குகிறது. தேர்ந்தெடுத்த ரீதியில் நுளம்புக் குடம்பிகளை அழிப்பதனால், சூழலுக்குப் பாதுகாப்பானது. அத்துடன் உலகளாவிய ரீதியில் நுளம்புகளை வேருடன் இல்லாதொழிப்பதற்காக BTI தொழில்நுட்பமானது உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

என்ன நன்மைகள் கிடைக்கின்றன?

வர்த்தக ரீதியாக BactoBti®  எனப் பெயரிடப்பட்டுள்ள உற்பத்தியானது கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டிணைவுடன் தற்பொழுது இலங்கையில் கிடைக்கின்றது. இது ஒரு தனித்துவமான உற்பத்தியாகும். நுளம்புக் குடம்பிகளை, உற்பத்தியாகும் இடங்களிலேயே அழிப்பதன் மூலம் நுளம்புக் கட்டுப்பாட்டுப் பிரச்சினையை சேதன முறையில் தீர்க்கின்றது. இதனால் வினத்திறனான முறையில் குடம்பிகளை, அவை உற்பத்தியாகும் இடங்களிலேயே கட்டுப்படுத்தி, டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா மற்றும் யானைக்கால் போன்ற நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. ஆபத்து நிறைந்துள்ள தொகுப்புப் பூச்சி கொல்லிகளுடன் ஒப்பிடும் போது, BactoBti® ஆனது, தேனீக்கள், பட்டுப் பூச்சிகள் மற்றும் பூச்சிகளின் இயற்கை எதிரிகள் போன்ற நன்மை பயக்கும் இனங்களைத் தவிர்த்து நுளம்புக் குடம்பிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொல்கின்றது. நஞ்சு அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளின் படி, ஏனைய நீர்வாழ் மற்றும் தாவர விலங்குகளிற்கு BactoBti® எதுவித ஆபத்தையும் விளைவிப்பதில்லை. சூழலிற்கு நட்பான உற்பத்தியாகத் திகழ்வதனால், மனிதரிற்கு முற்றிலும் தீங்கற்றது.

BactoBti® தொழிற்படும் முறை

BactoBti®  உள்ளெடுக்கப் பட்டதும், நுளம்புக் குடம்பியின் இரைப்பைக் கலங்களினை செயல் இழக்கச் செய்து அவற்றை அழிக்கின்றது. சில நாட்களின் பின்னர் குடம்பிகள் பட்டினியால் இறக்கின்றன..

 

Application Method

நுளம்பு வாழிடம் அளவை (பக்டோ பிடிஐ/ஹெக்டயர்) ஐதாக்கம்(10 லீற்றர் நீரில்) பிரயோக முறை
தெளிந்த நிலையான  நீர், குறைந்தளவு நுளம்பு தொற்றுதலடைந்த நீர் நிலைகள், குடி நீர் தவிர்ந்த, நீர்ப்பாசன கால்வாய்கள், தெருவோர கால்வாய்கள், வெள்ள நீர் தேங்கி நிற்கும் குளங்கள், புல்வெளியுடன் கூடிய  நீரேந்து பிரதேசங்கள் ,உவர் சதுப்பு நிலங்கள் ,வயல் வெளிகள்  மற்றும் பயிர் செய்கை பண்ணப்பட்ட  நுளம்பு குடம்பிகளை கொண்ட நிலையான  நீர் 20 லீற்றர் 200 மி. லீ ஒரு சதுர மீட்டரிற்கு ஐதாக்கப் பட்ட 10 மி. லீ  பக்டோ பிடிஐ கலவையினை விசிறவும்
மாசடைந்த கடனீரேரி , சேதன பொருட்கள் தேங்கிய  நீர்
30 லீற்றர் 300 மி. லீ
மாசடைந்த நீர் , அல்கா அதிகளவில் காணப்படும் போது , பிந்திய 3ம் நிலை முந்திய 4ம் நிலை நுளம்பு குடம்பிகள் முதிர்ச்சியடையும்  போது  மற்றும் / அல்லது நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படும் போது உயர் செறிவுகளில் பாவிக்கவும்


*நேரடி குடிநீர் மூலகங்கள் மற்றும் பரிகரிக்கப்பட்ட குடிநீருக்கான பிரயோகம் சிபாரிசு செய்யப் படவில்லை.

நுளம்பு குடம்பிகள் உற்பத்தியாகும் இடங்கள்