ஸ்பரோ 888 ப்ளஸ்ஆ

ஸ்பரோ 888 ப்ளஸ் ஆனது ஒரு சேதன் விவசாய மற்றும் தோட்ட கலைக்கான உயிரியல் பிரிகையாக்கமடையக் கூடிய பல்வேறுபட்ட நிலைகளில் கட்டுப்படுத்தக் கூடிய தாது எண்ணையிலான தெளிப்பானாகும்.

ஸ்பரோ 888 ப்ளஸ், சேதன விவசாயத்தில் பீடை கட்டுப்பாட்டிற்காக சர்வதேச சேதன விவசாய நடவடிக்கைகளுக்கான ஒன்றியம் (IFOAM) மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பினால் (EPA) அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இது இயுஜின் ஐக்கிய அமெரிக்காவின் சேதன விவசாயத்தின் ஒரு உள்ளீடாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இது பீடைக் கட்டுப்பாட்டிற்கான ஒன்றிணைந்த பீடை நோய் முகாமைத்துவத்தின் ஒரு பெறுமதி மிக்க அங்கமாகும்.

ஸ்பரோ 888 ப்ளஸ் அம்சங்கள்
மீதிகள் அற்றது

உணவு உற்பத்தி பொருட்களில் எது வித நச்சு மீதிகளையும் விடுவிக்காதமையால் பாதுகாப்பானது. உணவு சங்கிலியினூடு கடத்தப்படுவதில்லை. அத்துடன் நன்மை பயக்கும் பூச்சிகளின் மீதான தாக்கம் புறக்கணிக்கத்தக்கது.

உயிரியல் பிரிகையடையக் கூடியது

நுண்ணங்கிகள், ஒளி மற்றும் காற்றினால் உடைக்கப்படுவதால் தெளிக்கும் போது உயிரியல் ரீதியாக பிரிகையடையக் கூடியது.

சிக்கனமானது

அனைத்து பருவகாலங்களுக்குமான இவ்வுற்பத்தியினை குறைந்தளவு தெளிப்பு வட்டங்களுடன் பிரயோகிப்பது தாவரத்தின் உயர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிறது. பல்வேறுபட்ட பீடைகளிடமிருந்து தாவரத்தை பல நாட்களுக்கு பாதுகாப்பதால் தொடர் பிரயோகங்கள் தேவையில்லை. இது விவசாயிகளின் தெளிப்பு செலவினங்களை வெகுவாக குறைக்கிறது.

உயர்வினைத்திறன்

சுவாசத்தினை தடை செய்வதன் மூலம் பீடைகளைக் கட்டுப்படுத்துகிறது. பௌதீக மட்டத்திலேயேயன்றி இரசாயன மட்டத்தில் தொழிற்படுவதில்லை.பீடைகளிடையே இவ்வுற்பத்திக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பினமும் விருத்தி செய்யப்படவில்லை.

தெளிப்பு மற்றும் கலப்பதற்கான அறிவுறுத்தல்கள்:

பிரயோக அளவு : 5 மி.லீ ஸ்பரோ 888 ப்ளஸ் ஐ 1 லீ நீரில் ஐதாக்கவும்.(0.5%)

உதாரணமாக 16 லீ கலவை தாங்கியினுள் 8 லீ நீரை எடுத்து அதனுள் 80 மி.லீ யினை ஊற்றி நன்றாக கலக்கவும்.

தெளிப்பின் போது கலக்கல் நிலையினைப் பேணவும். இலையின் மேல் மற்றும் கீழ் புறங்களில் தெளிக்கவும். தாவரம் பூரணமாக தெளிற்பிற்கு உட்பட்டதை உறுதிப்படுத்தவும்.

சராசரியாக ஒரு ஏக்கரிற்கு 1.5 - 2 லீ ஸ்பரோ 888 ப்ளஸ் தேவைப்படும்.

சிறந்த பலனைப் பெற 15 நாட்கள் இடைவெளியில் ஸ்பரோ 888 ப்ளஸ் தெளிக்கவும்.

உஷ்ண நிலை மற்றும் காற்றோட்டம் அதிகமாக உள்ள நாட்களில் தெளிப்பினை மேற் கொள்ள வேண்டாம். மழைக் காலங்களில் தெளிப்பதைத் தவிர்க்கவும்.

களஞ்சியப்படுத்தல்

கொள்கலனை, நீர் மற்றும் நேரடி சூரிய ஒளி படாதவாறு களஞ்சியப்படுத்தவும்.

பயிர் பாதுகாப்பு

ஒரு போதும் வெப்பம் மற்றும் ஈரலிப்பு அழுத்தத்திற்கு உள்ளான தவரத்திற்குப் பிரயோகிக்க வேண்டாம்.

நோய் தாக்கம், வரட்சி, உலர் காற்று அல்லது உயர் நைதரசன் பிரயோகம் போன்றவற்றால் நலிவுற்ற, பலவீனப்பட்ட தாவரங்களுக்குப் பிரயோகிக்க வேண்டாம். எவ்வகையான நீர்ப்பாசன முறைகளுக்கூடாகவும் பிரயோகிக்க வேண்டாம்.

கப்டான், காபரைஸ், டைமெதொவட் அல்லது கந்தகம் அடங்கிய வேறு எந்த இரசாயன பொருட்களுடனும் சேர்த்து பயன்படுத்த வேண்டாம். நுண் தூளாக்கப்பட்ட கந்தகம், பீடை நாசினிகள் அல்லது வேறு இரசாயனங்களை, ஸ்பரோ 888 ப்ளஸ் பாவனையின் முன் அல்லது பின் 20 நாட்களுக்கு பிரயோகிப்பது பார தூரமான பயிர் சேதத்தை ஏற்படுத்தலாம்