சூப்பர் சீட்

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கட்டமைப்பு, மரபணு & அனுசேப சேர்வைகளில், நைதரசன் முக்கியமானதொரு மூலகமாகும். புரதம் செறிந்த அவரை உணவுகளில் நைதரசன் மூலகம் அதிகம் அடங்கியுள்ளது. பக்டீரியாக்களின் இயற்கை வாழிடமாக மண் இருப்பினும், அவரை வகைத் தாவரங்களில் வேர் முடிச்சுக்களை உருவாக்கும் பக்டீரியாக்களினை சரியான அளவினில் மண் கொண்டிருப்பதில்லை.

இதேவேளை, றைசோபியமானது (Rhizobium Species) நன்கு அறியப்பட்ட முக்கிய அவரை தாவர ஒன்றியவாழி நைதரசன் பதிக்கும் பக்டீரியா வகையாகும். இவை அவரைத் தாவர வேர்களில் தொற்றுதலடைவதன் மூலம், தனித்துவமாக நைதரசன் பதிக்கும் வேர் முடிச்சுக்களை அதிகளவில் தோற்றுவிக்கின்றன.

விதைகளிற்கு அல்லது பயிர் நிலங்களிற்கு பௌதீக ரீதியாக இவ்வகையான பக்டீரியாக்களினை பிரயோகிப்பதானது, வேர் முடிச்சுக்களை உருவாக்கும் சரியான குல வகையினை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் ஆரம்பத்திலேயே வினைத்திறனான வேர் முடிச்சுக்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொடர்ச்சியான முறையில் தாவரத்திற்கு நைதரசன் கிடைக்கப் பெறுவதனால், உயர் தரமான விளைச்சல் உறுதி செய்யப்படுகின்றது.

அவரை வகைத் தாவரங்களான சோயா, பச்சைப் பயறு, உழுந்து, கௌபி, துவரை மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களிற்கு பிரயோகிக்க முடியும்.

பிரயோக முறை
1. விதை பரிகரிப்பு

500 மி.லீ SuperSeed , சிறிதளவு ஆறிய சோற்றுக் கஞ்சியுடன் 10 Kg விதையினை கலந்து 2 மணி நேரம் ஊற விட்ட பின்னர் நேரடியாக விதைத்தலிற்கு பயன்படுத்தவும்.

2. பயிர் பிரயோகம் (ஏக்கரிற்கு 3 லீட்டர்)

60 லீட்டர் நீரில், 1 லீட்டர் SuperSeed ஐதாக்கி 15- 20 நாட்கள் நடுகையின் பின்னர் பயிர் வேர்ப்பகுதியை சூழ விசிறவும்.